Tuesday, June 16, 2009

Thursday, June 11, 2009

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி


சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் இலங்கையின் பலபாகங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வவுனியாமாவட்டத்தில் உள்ள பொதுக்கட்டடங்களில். தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பம்பைமடு யாழ் பல்கலைக்கழக வளாகம்,பம்பைமடு தொழில்நுட்பக்கல்லூரி, பூந்தோட்டம் கூட்டுறவுப் பயிற்சிக்கல்லூரி,றம்பைக்குளம் மகளீர் கல்லுரி, வவுனியா மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை , வவுனியா காமினி மகாவித்தியாலயம் போன்ற இடங்களில் தடத்துவைக்கப்ட்டிருக்கின்றனர் இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை முன்னர் நாம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம் (http://shathyam.blogspot.com/2009/05/blog-post.html) தற்போது இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பலர் வவுனியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் முறிவுகளுக்கு உள்ளானவர்கள், கண்டல் காயங்களுக்கு உள்ளானவர்கள், வெளிக்காயங்களுக்கு உள்ளானவர்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளனர்.

Monday, June 8, 2009

வயது முதிர்ந்தவர்கள் முகாங்களுக்கு வெளியில் உறவினர் களுடன் வசிப்பதற்கான செயல்முறைகளை அடிக்கடி மாற்றும் அதிகாரிகள்


வயது முதிர்ந்தவர்கள் முகாங்களுக்கு வெளியில் உறவினர் களுடன் வசிப்பதற் சிக்கலான நடைமுறை களுக்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். இவ் நடைமுறைகள் அடிக்கடி மாற்றப்படுவதனால் மக்கள் பெரிதும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முன்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை உறவினர்கள் முகாமிற்கு வெளியில் எடுப்பதற்கு கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளர் அவரின் ஊடாக அரசாங்க அதிபர் அவரின் ஊடாக மாவட்ட கட்டளைத்தளபதி க்கும் முகவரியிட்டு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கையொப்பம் வாங்கி அதனை அரச அதிபர் பணிமனையில் கையளித்து அதற்கு அத்தாட்சியாக ஒரு ஆவணம் வழங்கப்பட்டது. அரச அதிபர் அதனை கட்டளைத்தளபதிக்கு அனுப்பிவைப்பார். விடுவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரம் 20 தொடக்கம் 30 நாட்களுக்குள் பிதேச செயலகத்திலும், அரச அதிபர் பணிமனையிலும் அறிவித்தல் பலகையில் இடப்பட்டது.
அதன்பின் முன்னைய நடைமுறை தேவையில்லை உறவினர்கள் முகாம் கிராம சேவகர்ஊடாக முகாம் பொறுப்பதிகாரிக்கு கடிதம் எழுதுவதன் மூலம் கூட்டிச் செல்லமுடியும் என்று கூறப்பட்டது. அதுவும் பின்னர் இரத்தானது. இவ்வாறு பல நடைமுறைகள் வந்து பின் இரத்தாகி மக்களை அலைய வைத்த நிலையில் கடந்த 3ஆம் திகதி அன்று நடைமுறைக்கு வந்த 7 பக்கங்களைக் உடைய விண்ணப்பப்படிவ நடைமுறையும் இன்று இரத்தாகியுள்ளதாக மாவட்ட செயலகத்தினர் அறிவித்துள்ளனர். மாற்று எற்பாடுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.

7 பக்கப் படிவத்தில் உள்ளவை-}
1.வெளியில் எடுக்கும் உறவினரின் விபரங்கள்
2.தடுப்பு முகாமில் உள்ள உறவினரின் விபரங்கள்
3.தடுப்பு முகாமில் உள்ள உறவினர் வசிக்கும் முகாம் ,வலயம், வீட்டு இலக்கம்
4.விடுவிக்கப்படின் வசிக்கப்போகும் முகவரி, பொலிஸ் பிரிவு
5.வெளியில் எடுப்பவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான
ஆவணங்கள்(நீர் அல்லது மின்கட்டண சிட்டை, வாக்காளர் டாப்புப் பிரதி)
6.உறவினரின் உறுதி மொழி
7.கிராம சேவகரின் உறுதிப்படுத்தல்
8.பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல்
9.முகாம் பொறுப்பதிகாரியின் அறிக்கை
10.உறவினருடன் செல்வதற்கான சம்மத உறுதி மொழி
11.சாட்சிகள் இரண்டு பேரது விபரமும் கையொப்பமும்
12.இவற்றிற்குப்பின் மாவட்ட அரச அதிபரின் சிபாரிசு
13.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரின் சிபாரிசு
(சுருக்கம்)

Wednesday, June 3, 2009

தடுப்பு முகாம்களில் பாரிய பிரச்சினையாகவுள்ள நீர்த்தட்டுப்பாடு

தற்போது தடுப்பு முகாம்களில் காணப்படுகின்ற முக்கியபிரச்சினைகளில் ஒன்றாக நீர்த்தட்டுப்பாடும் காணப்படுகின்றது. குடிப்பதற்கான சுத்தமான நீர்,குளிப்பதற்கான போதி அளவு நீர் இன்றி இவ் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர், நீண்டவரிசையில் ஒரு வாளி நீர் எடுப்பதற்தகு நின்று அந்த ஒரு வாளி நீரின்மூலமே மக்கள் குளிக்கின்றனர். ஒருவர் ஒரு வாளி நீர் மட்டுமே எடுக்கமுடியும்,இரண்டாவது வாளி நீர் எடுப்பதாயின் திரும்பவும் இறுதியில் இருந்து வரிசைறில் வரவேண்டும் . உதவியற்ற வயது முதிர்ந்தோர் நீருக்காகப் பெரிதும் துன்பப்படுகின்றனர். சிறுவர்கள்,குழந்தைகளின் நிலையும் ,நோயுற்றவர்களின் நிலையும் ,வேதனைக்கு உரியதாக உள்ளது. பெண்கள், ஆண்கள் என்று இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் திறந்த வெளியில் நின்றே குளிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.இங்கு மக்கள் நோய்களுக்கு உட்படுவதற்கும், முதியவர் களின் இறப்புக்கள் அதிகரிப்பதற்கும் நீரும் முக்கிய காரணமாக உள்ளது. குடி நீர் பெறுவதும் சிக்கல் நிறைந் விடயமாகவே காணப்படுகின்றது.
உலகத்தமிழ் உறவுகளே!....
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப்பற்றி சிந்திக்கின்ற அதே சமயத்தில் இடம்பெயர்ந்து நிற்கதிக்கு உள்ளாகி தடுப்பு முகாம்களி இருக்கும் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உங்களாலான உதவிகளை சாத்தியமான வழிகளில் செய்யவேண்டியது மனித நேயம் கொண்ட ஒவ்வோருவரினதும் கடமையாகும். நீர்ப்பிரச்சினையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களிற்கு குழாய்க் கிணறுகளை அமைத்து நீர்வசதி செய்வதற்கு உலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் மூலம் சர்வதேச தொண்டுநிறுவனங்களை அணுகி அவற்றிற்கு நிதி வழங்கி குழாய்கிணறுகளை முகாங்களில் அமைப்பதற்தகு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உங்கள் உதவியால் அப்பாவி மக்களின் ஒரு பிரச்சினையினை ஓரளவிற்கு என்றாலும் குறைக்கமுடியும்.

Tuesday, June 2, 2009

வன்னி மக்களின் சொத்துக்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லும் இராணுவம்


வன்னியில் இருந்து வந்த மக்கள் வரும்போது உடுத்த ஆடைகளுடனும் சிலர் சிறு கைப்பைகளுடனும் மாத்திரமே வந்தனர் விலை மதிக்கமுடியாத சொத்துக்கள் பலவற்ரை இவர்கள் ஒவ்வோரு இடத்திலும் இருந்து இடம்பெயர்ந்து வரும்போதும் கட்டம் கட்டமாக விட்டுவிட்டு வந்தனர். வன்னி மக்களின் பொருட்களை தென் இலங்கைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வன்னி முற்றாக இராணுவத்தினரால் கைப்பற்ற முன்னமே இச் சொத்துக்களை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்த போதிலும் இவ் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக இன்று (2-6-2009) மதியவேளையில் நீண்டநேரம் வவுனியாவில் போக்குவரத்தினைத்தடை செய்து நீண்ட வாகனத்தொடரணி ஒன்றின் மூலம் வன்னி மக்களின் சொத்துக்கள் தென் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் பல பேரூந்துகள்,பாரஊர்திகள்,மோட்டார்சைக்கிள்கள்.,துவிச்சக்கர வண்டிகள் போன்ற வாகனவகைகளும், தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டி, கட்டில்,கதிரை,மேசை, எனைய மரத்தளபாடங்கள், கூரை மரங்கள்,ஓடு, போன்ற பொருட்கள் உள்ளடங்கியிருந்தன. எவற்ரை எல்லாம் எடுத்துவர முடியுமோ அவற்ரை எல்லாம் இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு-திருகோணமலை வீதி ஊடாகவும் பொருட்கள் எற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Monday, June 1, 2009

வைத்தியசாலைகளில் உரிய பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் இன்றி மக்கள் தவிப்பு



வன்னியில் இறுதி யுத்தத்தின் போது பலர் உயிர் இழந்தும் ,மேலும்பலர் காயமடைந்தமையும் அனைவரும் அறிந்தது, காயமடைந்தவர்களில் பலர் வவுனியா மாவட்ட வைத்திய சாலையிலும் , பூவரசங்குளம் வைத்தியசாலை, செட்டிகுளம் வைத்தியசாலை,மன்னார் மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அதிகமான நோயாளர்கள்,அதிகாரிகளின் அசமந்தப் போக்கு,இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள் என்பனவற்றின் காரணமாக
துன்பங்களை அனுபவித்தும் , உயிரிழந்தும் வருகின்றனர் பெரும்பான்மையான மக்கள் கட்டில்களுக்குக் கீழ்ப்புறமாகவும் வைத்தியசாலைகளின் நடைபாதைகளிலும் சுற்றுப்புறங்களிலும் தங்கியிருக்கின்றனர்.வைத்தியசாலைகூட அகதிமுகம் போலவே காட்சிஅளிக்கின்றது. அதிக சனத்தொகை காரணமாக கழிவகற்றல் செயற்பாடுள் உரியமுறையில் இன்றி வைத்தியசாலைச் சூழலில் துர்நாற்றம் வீசுகின்றது. உறவினரிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஊனமுற்றோர் பலர் இவ் வைத்தியசாலைகளில் உள்ளனர் இவர்களின் உறவினர்களை ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்துப்பிரித்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு இவர்களை மட்டும் வைத்தியசாலைக்குக் கொண்டுவந்துள்ளனர். இவர்களில் இரு கால்களையும் இழந்தவர்கள், இருகைகளையும் இழந்தவர்கள், எழுந்து இருக்கமுடியாதவர்கள் என பல்வேறு பிரச்சனைகளுடன் பலர் உள்ளனர். தங்களுடைய காலைக்கடன்களைக்கூடக் கூச்சம் இன்றி நிறைவேற்ற முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். சில தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இவர்களுக்கு உதவுகின்ற போதிலும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போன்று அமைவதில்லை. உணர்வு ரீதியான ஆதரவினை குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே வழங்கமுடியும் அதற்கு இவ் வைத்தியசாலைகளில் தடைகள் காணப்படுகின்றன. உயர் சிகிச்சைகள் மூலம் உயிர்பிழைக்கும் வாய்ப்புக்கள் இருந்தபோதிலும் அதற்கும்பல தடைகள் காணப்படகின்றன.

Saturday, May 30, 2009

காயங்களுடன் கிடந்தவர்களை பாதுகாபு வலயத்தில் வைத்துச்சுட்டுக் கொலைசெய்த இலங்கை இராணுவம்


வன்னியில் பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் இறுதியாக யுத்தம் நடந்த காலர்பகுதி அதாவது 'மே' மாதம் 17ம் திகதிக்குப்பிற்பட்ட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான காயமடைந்த போராளிகளும் பொது மக்களும் இராணுவத்தால் சுடப்பட்டும், உயிருடன் புதைக்கப்பட்டும் இருக்கின்றனர்.சில இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டதாகவும் மாற்றும் ஒரு பகுதியினர் துவேசத்துடன் செயற்பட்டதாகவம் தற்போது வவுனியா வந்துள்ளவர்கள் கூறுகின்றனர்." தனது 15 வயது மகனை வயிற்றுக்காயத்துடன் வைத்திருந்ததாகவும் அங்கு இராணுவம்வந்து தாம் மகனைக் கொண்டு வருவதாகவும் தாம்மை போகுமாறும் கூறியகாகவும் இதுவரைக்கும் மகனுக்கு என்ன நடந்தது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். மாற்றுமொருவர் கூறுகையில் இறந்த தமது தாயின் சடலத்தைப் புதைப்பதற்கு குளி ஒண்றுள் வைத்திருந்தோம் அதைக்கூட மூடவிடாது துரத்தியதாகாக் கூறினார். மற்றுமொருவர் கூறுகையில் காயமடைந்து கிடந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்றதையும்,அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் களற்றியதையும் தாம் கண்டதாகவும் தெரிவித்தார். உண்மைகளைச் சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். வாய்திறந்து உயிர்துறக்கவேண்டி வந்துவிடும் என்பதால் என்னும்பல மனதைஉருக்கும் சம்பவங்கள் தாமதமாகவே வெளிவரும் மக்கள் தமது பாதுகாப்பை உறதிப்படுத்தியபின்.

Friday, May 29, 2009

யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினர்


யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வரகின்றனர் திடீர் திடீர் என்று கூடாரங்களுக்குள் உட்பிரவேசிக்கும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். எந்தவிதமான கட்டப்பாடும் அற்ற வகையில் முழுச் சுதந்திரத்துடன் இவர்கள் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் கடமையில் உள்ள கிராம அலுவலர்களையும் கணக்கில் எடுப்பதில்லை. கொடிகாமம் அல்லாரை தடுப்பு முகாமில் கிராம அலுவலர் இராணுவத்தால் தாக்கப்பட்டும் உள்ளனர்.தங்களின் எண்ணப்படியெ செயற்படவேண்டும் என்று இராவணுத்தினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.

Sunday, May 24, 2009

வவுனியா முகாங்களில் வேகமாகப் பரவிவரும் தொற்று நோய்கள்

வவுனியா முகாங்களில் வேகமாகத்தெற்று நோய்கள் பரவிவருகின்றன. இடநெருக்கடி காரணமாக இவற்ரின் பரவல் அதிகமாக உள்ளது. சின்னமுத்து, செங்கமாரி, வயிற்ரோட்டம் போன்ற நேய்கள் அதிகம் காணப்படகின்றன. தற்காலிகக் கூடாரங்களில் காணப்படம் அதிக வெப்பமம் இதற்குக் காரணமாகும். இங்கு சரியான முறையில் குளிப்பதற்கான நீர் வசதி இல்லை. சுத்தமான குடிநீர் வசதி இல்லை நோய்களுக்கு ஏற்ற உணவு உண்பதற்கும் வாய்பு இல்லாமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



















பூவரசங்குளம் வைத்தியசாலை அருகில் உள்ள பாடசாலைக் கட்டடத்தையும் இணைத்து இயங்கிவருகிறது அங்கு செங்கமாரிக் காச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றனர்.


பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் ஒன்று














பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டம்ளர் பாலுக்காக வரிசையில் நிக்கின்றனர்










Saturday, May 23, 2009

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த இளம் வயதினர் வவுனியாவிலும் மேலும் பல சிங்களப்பகுதிகளிலு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் வவுனியாவில் பூந்தோட்டம் கூட்டுறவுப்பயிற்சிக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் வவுனியா றம்பைக்குளம் மகளிர் கல்லுரியிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். றம்பைக்குளம் மகளிர் கல்லுரியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கதறும் அளுகுரல் பகலிலும்;இரவில் அதிகமாகக்கேட்பதாக அயலவர்கள் கூறுகின்றனர் 20ம் திகதி இரவு இத்தடுப்பு முகாமில் இருந்து இரத்தக்காயங்களுடன்,இரத்தம் கசியக் கசிய ஒரு இளைஞன் மதில்எறிக்குதித்துத் தப்பித்து அருகில் உள்ள வணக்கத்தலம் ஒன்றிற்குச்சென்று அங்கு அடைக்கலம் கோரியிருக்கிறார் மதகுரு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.இவ் இளைஞன் மூலம் இச்சித்திரவதைச் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இராணுவத்தைத்தவிர வேறு தொண்டு நிறுவனங்களோ கண்காணிப்பாளர்களோ இல்லாதநிலையில் வதைத்து அழிக்கப்படுகின்றனர். பிந்திய தகவலின்படி இவர்கள் தரம்பிரிக்கப்பட்டு கண்டிக்கு அனுப்பப்பட இருப்பதாகத்தெரிகிறது.

இறுதி யுத்தத்திற்கு முன் வந்தவர்களில் 1000 திஇற்கும் மேற்பட்டவர்கள் பம்பைமடு தொழில்நுட்பக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்னர் இவர்கள் தற்போதைக்கு பெரியஅளவிலான அச்சுறுத்தல் இன்றி இருக்கின்றனார் கடற்த 19ம் திகதி இவர்கள் இங்குள்ள மைதானத்தில் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர் பின் இராணுவத்தலையீட்டால் ஒரு மணிநேரத்தில் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.