Monday, June 8, 2009

வயது முதிர்ந்தவர்கள் முகாங்களுக்கு வெளியில் உறவினர் களுடன் வசிப்பதற்கான செயல்முறைகளை அடிக்கடி மாற்றும் அதிகாரிகள்


வயது முதிர்ந்தவர்கள் முகாங்களுக்கு வெளியில் உறவினர் களுடன் வசிப்பதற் சிக்கலான நடைமுறை களுக்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். இவ் நடைமுறைகள் அடிக்கடி மாற்றப்படுவதனால் மக்கள் பெரிதும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முன்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை உறவினர்கள் முகாமிற்கு வெளியில் எடுப்பதற்கு கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளர் அவரின் ஊடாக அரசாங்க அதிபர் அவரின் ஊடாக மாவட்ட கட்டளைத்தளபதி க்கும் முகவரியிட்டு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கையொப்பம் வாங்கி அதனை அரச அதிபர் பணிமனையில் கையளித்து அதற்கு அத்தாட்சியாக ஒரு ஆவணம் வழங்கப்பட்டது. அரச அதிபர் அதனை கட்டளைத்தளபதிக்கு அனுப்பிவைப்பார். விடுவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரம் 20 தொடக்கம் 30 நாட்களுக்குள் பிதேச செயலகத்திலும், அரச அதிபர் பணிமனையிலும் அறிவித்தல் பலகையில் இடப்பட்டது.
அதன்பின் முன்னைய நடைமுறை தேவையில்லை உறவினர்கள் முகாம் கிராம சேவகர்ஊடாக முகாம் பொறுப்பதிகாரிக்கு கடிதம் எழுதுவதன் மூலம் கூட்டிச் செல்லமுடியும் என்று கூறப்பட்டது. அதுவும் பின்னர் இரத்தானது. இவ்வாறு பல நடைமுறைகள் வந்து பின் இரத்தாகி மக்களை அலைய வைத்த நிலையில் கடந்த 3ஆம் திகதி அன்று நடைமுறைக்கு வந்த 7 பக்கங்களைக் உடைய விண்ணப்பப்படிவ நடைமுறையும் இன்று இரத்தாகியுள்ளதாக மாவட்ட செயலகத்தினர் அறிவித்துள்ளனர். மாற்று எற்பாடுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.

7 பக்கப் படிவத்தில் உள்ளவை-}
1.வெளியில் எடுக்கும் உறவினரின் விபரங்கள்
2.தடுப்பு முகாமில் உள்ள உறவினரின் விபரங்கள்
3.தடுப்பு முகாமில் உள்ள உறவினர் வசிக்கும் முகாம் ,வலயம், வீட்டு இலக்கம்
4.விடுவிக்கப்படின் வசிக்கப்போகும் முகவரி, பொலிஸ் பிரிவு
5.வெளியில் எடுப்பவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான
ஆவணங்கள்(நீர் அல்லது மின்கட்டண சிட்டை, வாக்காளர் டாப்புப் பிரதி)
6.உறவினரின் உறுதி மொழி
7.கிராம சேவகரின் உறுதிப்படுத்தல்
8.பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல்
9.முகாம் பொறுப்பதிகாரியின் அறிக்கை
10.உறவினருடன் செல்வதற்கான சம்மத உறுதி மொழி
11.சாட்சிகள் இரண்டு பேரது விபரமும் கையொப்பமும்
12.இவற்றிற்குப்பின் மாவட்ட அரச அதிபரின் சிபாரிசு
13.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரின் சிபாரிசு
(சுருக்கம்)

1 comment:

  1. LET MY PEOPLE GO HOME! FOR GOD SAKE!!!
    YOU WIPED OUT ALL LTTE!!!+ MANY 1000S INNOCENT PEOPLE! WHAT DO YOU WANT MORE...YOU ARROGANT IDIOTS!!!RACIST BUNCH OF BRUTAL ANIMALS!! LEAVE MY PEOPLE ALONE!!!

    ReplyDelete