Wednesday, June 3, 2009

தடுப்பு முகாம்களில் பாரிய பிரச்சினையாகவுள்ள நீர்த்தட்டுப்பாடு

தற்போது தடுப்பு முகாம்களில் காணப்படுகின்ற முக்கியபிரச்சினைகளில் ஒன்றாக நீர்த்தட்டுப்பாடும் காணப்படுகின்றது. குடிப்பதற்கான சுத்தமான நீர்,குளிப்பதற்கான போதி அளவு நீர் இன்றி இவ் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர், நீண்டவரிசையில் ஒரு வாளி நீர் எடுப்பதற்தகு நின்று அந்த ஒரு வாளி நீரின்மூலமே மக்கள் குளிக்கின்றனர். ஒருவர் ஒரு வாளி நீர் மட்டுமே எடுக்கமுடியும்,இரண்டாவது வாளி நீர் எடுப்பதாயின் திரும்பவும் இறுதியில் இருந்து வரிசைறில் வரவேண்டும் . உதவியற்ற வயது முதிர்ந்தோர் நீருக்காகப் பெரிதும் துன்பப்படுகின்றனர். சிறுவர்கள்,குழந்தைகளின் நிலையும் ,நோயுற்றவர்களின் நிலையும் ,வேதனைக்கு உரியதாக உள்ளது. பெண்கள், ஆண்கள் என்று இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் திறந்த வெளியில் நின்றே குளிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.இங்கு மக்கள் நோய்களுக்கு உட்படுவதற்கும், முதியவர் களின் இறப்புக்கள் அதிகரிப்பதற்கும் நீரும் முக்கிய காரணமாக உள்ளது. குடி நீர் பெறுவதும் சிக்கல் நிறைந் விடயமாகவே காணப்படுகின்றது.
உலகத்தமிழ் உறவுகளே!....
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப்பற்றி சிந்திக்கின்ற அதே சமயத்தில் இடம்பெயர்ந்து நிற்கதிக்கு உள்ளாகி தடுப்பு முகாம்களி இருக்கும் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உங்களாலான உதவிகளை சாத்தியமான வழிகளில் செய்யவேண்டியது மனித நேயம் கொண்ட ஒவ்வோருவரினதும் கடமையாகும். நீர்ப்பிரச்சினையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களிற்கு குழாய்க் கிணறுகளை அமைத்து நீர்வசதி செய்வதற்கு உலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் மூலம் சர்வதேச தொண்டுநிறுவனங்களை அணுகி அவற்றிற்கு நிதி வழங்கி குழாய்கிணறுகளை முகாங்களில் அமைப்பதற்தகு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உங்கள் உதவியால் அப்பாவி மக்களின் ஒரு பிரச்சினையினை ஓரளவிற்கு என்றாலும் குறைக்கமுடியும்.

1 comment:

  1. DEAR FRIENDS!
    INFORM TO FORUT,WFP/UNHCR,ICRC AND GA/VAUNIYA OR ANY OTHER NGOS/INGOS BY EPOST YOUR IDEA OF BORE WELL! OR WATER SUPPLU BY PIPES FTOM NEARBY PLACES!

    ReplyDelete