Tuesday, June 2, 2009

வன்னி மக்களின் சொத்துக்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லும் இராணுவம்


வன்னியில் இருந்து வந்த மக்கள் வரும்போது உடுத்த ஆடைகளுடனும் சிலர் சிறு கைப்பைகளுடனும் மாத்திரமே வந்தனர் விலை மதிக்கமுடியாத சொத்துக்கள் பலவற்ரை இவர்கள் ஒவ்வோரு இடத்திலும் இருந்து இடம்பெயர்ந்து வரும்போதும் கட்டம் கட்டமாக விட்டுவிட்டு வந்தனர். வன்னி மக்களின் பொருட்களை தென் இலங்கைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வன்னி முற்றாக இராணுவத்தினரால் கைப்பற்ற முன்னமே இச் சொத்துக்களை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்த போதிலும் இவ் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக இன்று (2-6-2009) மதியவேளையில் நீண்டநேரம் வவுனியாவில் போக்குவரத்தினைத்தடை செய்து நீண்ட வாகனத்தொடரணி ஒன்றின் மூலம் வன்னி மக்களின் சொத்துக்கள் தென் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் பல பேரூந்துகள்,பாரஊர்திகள்,மோட்டார்சைக்கிள்கள்.,துவிச்சக்கர வண்டிகள் போன்ற வாகனவகைகளும், தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டி, கட்டில்,கதிரை,மேசை, எனைய மரத்தளபாடங்கள், கூரை மரங்கள்,ஓடு, போன்ற பொருட்கள் உள்ளடங்கியிருந்தன. எவற்ரை எல்லாம் எடுத்துவர முடியுமோ அவற்ரை எல்லாம் இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு-திருகோணமலை வீதி ஊடாகவும் பொருட்கள் எற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. GOD WILL HELP ALL TAMIL PEOPLE UNDER HUGE SUFFERINGS by sinhala brutality...physically,economically,psycologically!

    ReplyDelete