Monday, June 1, 2009

வைத்தியசாலைகளில் உரிய பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் இன்றி மக்கள் தவிப்பு



வன்னியில் இறுதி யுத்தத்தின் போது பலர் உயிர் இழந்தும் ,மேலும்பலர் காயமடைந்தமையும் அனைவரும் அறிந்தது, காயமடைந்தவர்களில் பலர் வவுனியா மாவட்ட வைத்திய சாலையிலும் , பூவரசங்குளம் வைத்தியசாலை, செட்டிகுளம் வைத்தியசாலை,மன்னார் மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அதிகமான நோயாளர்கள்,அதிகாரிகளின் அசமந்தப் போக்கு,இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள் என்பனவற்றின் காரணமாக
துன்பங்களை அனுபவித்தும் , உயிரிழந்தும் வருகின்றனர் பெரும்பான்மையான மக்கள் கட்டில்களுக்குக் கீழ்ப்புறமாகவும் வைத்தியசாலைகளின் நடைபாதைகளிலும் சுற்றுப்புறங்களிலும் தங்கியிருக்கின்றனர்.வைத்தியசாலைகூட அகதிமுகம் போலவே காட்சிஅளிக்கின்றது. அதிக சனத்தொகை காரணமாக கழிவகற்றல் செயற்பாடுள் உரியமுறையில் இன்றி வைத்தியசாலைச் சூழலில் துர்நாற்றம் வீசுகின்றது. உறவினரிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஊனமுற்றோர் பலர் இவ் வைத்தியசாலைகளில் உள்ளனர் இவர்களின் உறவினர்களை ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்துப்பிரித்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு இவர்களை மட்டும் வைத்தியசாலைக்குக் கொண்டுவந்துள்ளனர். இவர்களில் இரு கால்களையும் இழந்தவர்கள், இருகைகளையும் இழந்தவர்கள், எழுந்து இருக்கமுடியாதவர்கள் என பல்வேறு பிரச்சனைகளுடன் பலர் உள்ளனர். தங்களுடைய காலைக்கடன்களைக்கூடக் கூச்சம் இன்றி நிறைவேற்ற முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். சில தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இவர்களுக்கு உதவுகின்ற போதிலும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போன்று அமைவதில்லை. உணர்வு ரீதியான ஆதரவினை குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே வழங்கமுடியும் அதற்கு இவ் வைத்தியசாலைகளில் தடைகள் காணப்படுகின்றன. உயர் சிகிச்சைகள் மூலம் உயிர்பிழைக்கும் வாய்ப்புக்கள் இருந்தபோதிலும் அதற்கும்பல தடைகள் காணப்படகின்றன.

1 comment: